நடவும் தனிமா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க் கரியாய் சரணம் சரணம் தடவண் புயனே சரணம் சரணம் தனிமா முதலே சரணம் சரணம் கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்