நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளினமா மலர்அடி வழுத்தாப் புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன் சேர்ந்திடத் திருவருள் புரியாய் தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே தணிகைவாழ் சரவண பவனே