நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே