நாடொன் றியசீர்த் திருவொற்றி நகரத் தமர்ந்த நாயகனார் ஈடொன் றில்லா ரென்மனையுற் றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட மாடொன் றெங்கே யென்றேனுன் மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண் காடொன் றுடையீ ரென்றேன்செங் காடொன் றுடையே னென்றாரே