நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள் ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன் பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல் வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே