நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம் நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம் ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம் இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம் அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம் ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின் உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி