நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய் பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம் ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்