நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய் சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய் மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே