நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர் நாரணர்கள் மற்றவரின் நாடின்மிகப் பெரியர் வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர் மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம் மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின் ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி () மற்றவர்கள் - ச மு க பதிப்பு