நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல் நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன் தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார் சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால் தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே