நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய் மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே இணையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே திருச்சிற்றம்பலம் நெஞ்சொடு நேர்தல் திருவொற்றியூர் கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம்