நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி நெற்றியங் கண்கொளும் நிறைவே நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி நெடியமால் புகழ்தனி நிலையே நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி நெடுஞ்சடை முடித்தயா நிதியே