நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண் அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே