நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும் தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத வாயேர் சவுந்தர() மானே வடிவுடை மாணிக்கமே ( ) சௌந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று தொவே
நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே எனக்கும் உனக்கும்