நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மைதனிலே ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்றியல் உறுத்தும்ஒளியே காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக் கண்ணோங்கும் ஒருதெய்வமே தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே