நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே பொறுப்பதும் அன்றிஇவ் வுலக வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன் விரைமலர் அடித்துணை ஏத்தும் அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள்ளறுத் தவனே திருச்சிற்றம்பலம் அருள் திறந்து அலைசல் திருவொற்றியூர் கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம்