பசிக்குண வுழன்றுன் பாததா மரையைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல் நசிக்கும்இவ்வுடலை நம்பினேன் என்னை நமன்தமர் வருத்தில்என் செய்கேன் விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன் வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே