படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும் பரம்பர ஒளிஎலாம் அணுவில் கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக் கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம் அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த அருட்பெருஞ் ஸோதியாம் ஒருவன் கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே