பண்அ ளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன் தன்அ ளாவிய சோலைசூழ் தணிகைத் தடத்த ளாவிய தருமநல் தேவே பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே என்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே