பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப் பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக் கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்நாய் கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும் தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே