பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே பகராத வன்மொழி பகருகின் றீரே நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- புனித குலம் பெறுமாறு புகலல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்