பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே