பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின் பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப் புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால் பெருமநினக் கழகேயோ பேதை யாம்என் தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே திருச்சிற்றம்பலம் ஆற்றா முறை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்