பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும் கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும் வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும் உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே