பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப் பராபரஞ் சுடரினை எளியேற் கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை எண்ணுதற் கரியபேர் இன்பை உரங்கினர் வானோர்க் கொருதனி முதலை ஒப்பிலா தோங்கிய ஒன்றைத் தாங்கினார் அருண கிரிக்கருள் பவனைத் தணியையில் கண்டிறைஞ் சுவனே