பரம்பர நிறைவே பராபர வெளியே பரமசிற் சுகந்தரும் பதியே வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில் வயங்கிய பெருஞ்சுடர் மணியே கரம்பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே பொதுநடம் புரிகின்ற பொருளே