பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப் பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும் பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம் ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும் கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம் கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே