பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம் பாழ்பட்ட மனையில்நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது பட்டபா டாகும்அன்றிப் போய்ப்பட்ட புல்லுமணி புப்பட்ட பாடும்நற் புண்பட்ட பாடுதவிடும் புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள் போகம்ஒரு போகமாமோ ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக் காட்பட்ட பெருவாழ்விலே அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற அமர்போக மேபோகமாம் தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே