பார்பூத்த பசுங்கொடிபொற் பாவையர்கள் அரசி பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும் என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே