பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள் தாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன் மேலே அருள்கூர்ந் தெனைநின்தான் மேவு வோர்பால் சேர்த்தருளே