பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரால் விடுத்துய்யக் கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன் ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே
பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப் பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும் செய்கை நின்னதே செப்பலென் சிவனே காவி நேர்விழி மலைமகள் காணக் கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே