புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும் கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் மைம்மா றறியேன் கடையேனே திருச்சிற்றம்பலம் அவல மதிக்கு அலைசல் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்