புன்றலைஎன் தலையெனநான் அறியாமல் ஒருநாள் பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள் இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன் இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து மன்றலின்அங் கெனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்தாய் மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன் பொன்றலிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில் புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே