புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன் கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின் னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ