புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும் மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே