பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல் கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத் திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே