பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையைப் பெரிய தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த சாமியைத் தயாநிதி தன்னை வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வைஎன் மதியிலே விளங்கும் உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள் ஒருவனைக் கண்டுகொண் டேனே