பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள் ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன் நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே