பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே