பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந் தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச் செங்குமுத மலரவரு மதியே எல்லாம் செய்யவல்ல கடவுளே தேவ தேவே