பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே உன்னாசை கொண்டேஎன் ஒற்றிஅப்பா நான்மகிழ்ந்துன் மின்னாரும் பொன்மேனி வெண்ணீற்றைப் பாரேனோ