பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார் தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே
பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன் மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ