பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப் புவிநடையில் பற்பலகால் போந்து போந்து நென்மலையோ நிதிமலையோ என்று தேடி நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம் கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக் கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ