பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப் புனித நுலெலாம் புகழ்வ தாதலால் ஐய நின்திரு அருட்கி ரப்பஇங் கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன் மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்தி லாதவான் விளைந்த இன்பமே தைய லார்இரு வோரும் மேவுதோள் சாமி யேதிருத் தணிகை நாதனே
பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம் ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன் செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே