பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின் கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய் மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே
பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சின்னம் பிடி தாழிசை