பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப் புறத்தினும் அகத்தினும் புணர்ந்த தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச் செல்வமே நான்பெற்ற சிறப்பே மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை வாழ்வித்த என்பெரு வாழ்வே அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே அம்மையே அப்பனே அபயம்