பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும் திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென் கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே