பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய் மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே