பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம் புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக் கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச் சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும் திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி