பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன்இழந்தே துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன்எனை உற்றற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக் கற்றப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே